Saturday, 1 April 2017

மதுக்கடைகள் மூடல்.


தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம்' என ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், மக்கள் நலனொன்றே கருத்தாய் எண்ணற்ற பொதுநல வழக்குகள் பதிவு செய்து, அத்தனையிலும் வென்று இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் அதன் பயன் சென்று சேர வழிவகை செய்யும் பா.ம.க வே தலைசிறந்த #பொதுநல_அரசியல்_கட்சி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நேற்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் அற்புதமான தீர்ப்பு. இந்த வழக்கு சமூக நலம் சார்ந்தது. ஜனநாயகத்தின் நான்காம் தூண்கள் (பத்திரிக்கைகள்) வியாபார குழுமங்களாக மாறிப் போனதால், இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள்கூட மக்களைச் சென்றடைவதில்லை. இருப்பினும், கடமையில் தவறாத #விக்கிரமாதித்தனாய் தொடர்ந்து மக்கள் பணி செய்துவரும் பா.ம.க.வின் தொண்டன் என்பதில் எமக்கு பெருமையே.

ஜனநாயகக் கட்சி எனக்கூறிக் கொள்ளும் எந்த இந்திய கட்சிகளாவது #நிழல்_நிதிநிலை_அறிக்கை தயாரித்து அரசுக்கு உதவியதுண்டா.? கரை வேட்டி அணிந்தவனெல்லாம் அரசியல்வாதி ஆகிவிட முடியாது. ஏனெனில், அரசியல் அறிவும், நுட்பமும் சிறிதளவேனும் வேண்டும். அதுபோலவே, பதிவு செய்த கட்சிகள் அனைத்தும் அரசியல் கட்சிகளாகிவிட முடியாது. #கொள்கை என்பதும் சிறிதளவேனும் வேண்டும். அந்த வகையில் பா.ம.க. மட்டுமே தேறும். அற்ப காரணங்களுக்காக கட்சி ஆரம்பித்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கே இன்றைய ஊடகங்கள் கை கட்டி ஊழியம் செய்கின்றன.

அரசுக்கு வழிகாட்டும் #நிழல்_நிதிநிலை_அறிக்கையை (Shadow Budget) தமிழ்நாடு பின்பற்றுகிறதோ இல்லையோ மற்ற மாநிலங்கள் பின்பற்றி சிறப்படைகின்றன. அந்தவகையில் இந்திய அரசியலில் ஒரு சிறப்பான இடம் பா.ம.க.விற்கு உண்டென்பதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை.

கடமையைச் செய், பலனை எதிர் பாராதே என்கிறது முதுமொழி. ஆம், பா.ம.கவும் தன் அரசியல் கடமையை செவ்வனே செய்கிறது...

#பலன்..?